‘மனுஸ்மிருதி’ புத்தகங்களை பொது மக்களுக்கு வழங்கிய விசிக கட்சியினர் 12 பேர் கைது..!

Author: Vignesh
6 November 2022, 3:58 pm
thirumavalavan - updatenews360
Quick Share

தென்காசியில் மனுஸ்மிருதி புத்தகங்களை பொது மக்களுக்கு வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் “மனுஸ்மிருதி” புத்தகங்களை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்று புத்தகங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க விசிக திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூலை திருமாவளவன் வழங்கினார்.

இதனிடையே, தென்காசியில் மனுஸ்மிருதி புத்தகங்களை பொது மக்களுக்கு வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டு இருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 190

0

0