விருப்ப தொகுதிகளை கேட்டு திமுகவிடம் கூத்தாடும் விசிக : உத்தேச தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!

6 March 2021, 5:50 pm
Thirumavalavan - stalin - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உத்தேச தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி குறைந்த தொகுதிகளை வழங்கப்படும் என்ற ஸ்டாலினின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

அந்த வகையில், திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க முன்வந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் 7 தொகுதிகள் கேட்கப்பட்டது. இதனால், இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது.

இதனிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடச் சென்ற திருமாவளவனிடம் 6 தொகுதிகளை ஏற்க வேண்டாம் எனக் கூறி தொண்டர்கள் கோஷம் எழுப்பி முற்றுகையிட்டனர். ஆனால், அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமல், நிர்வாகிகளை வைத்து சமாதானம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உத்தேச தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதாவது,

தொகுதி – வேட்பாளர்

செய்யூர் (தனி) – பனையூர் பாபு

காட்டுமன்னார்கோவில் (தனி) – சிந்தனை செல்வன்

திட்டக்குடி (தனி) – பார்வேந்தன்

புவனகிரி (தனி) – எழில் கரோலின்

மயிலம் – பாலாஜி

உளுந்தூர்பேட்டை – முகமது யூசுப்

Views: - 39

0

1