கோவை அண்ணா மார்க்கெட்டில் அனுமதிக்க வேண்டும் : காய்கறி வியாபாரிகள் மனு!!

7 September 2020, 12:28 pm
Cbe Anna MArket - updatenews360
Quick Share

கோவை : அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளிவிட்டு வியாபாரம் செய்ய அனுமதி கேட்டு காய்கறி வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா காரணத்தால் அண்ணா மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளாகிய எங்களை தற்காலிகமாக வியாபாரம் செய்ய ஜி.சி.டி வளாகத்தில் அனுமதி வழங்கப்பட்டது

அந்த இடம் தற்போது மழை, வெயில், காற்று காரணமாக மிகவும் மோசமான நிலையில் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு உருவாகி உள்ளது. மேலும் எந்த ஒரு அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் உள்ளது.

தற்போது வியாபாரிகளும் பொருள் வாங்க வரும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள், வயதான பெண்கள் மற்றும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வழுக்கி கீழே விழுந்து அடிபடுவதால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

ஆகையால் தாங்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்து அண்ணா மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றி வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 4

0

0