வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி வாகன பிரச்சாரம் : போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு!!

8 November 2020, 4:41 pm
BJP Stop- Updatenews360
Quick Share

திருப்பூர் : பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கோரி வாகன பிரச்சாரம் மேற்கொள்ள முயன்ற பாஜகவின் இளைஞர் அணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில் கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தமிழக தமிழக அரசு அதற்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு பாரபட்சமில்லாமல் அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பாஜகவில் வேல் யாத்திரை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் திருப்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக இன்று அழகு மலையிலிருந்து திருமுருகன்பூண்டி வரை வாகன பிரச்சார பேரணி துவங்குவதாக இருந்தது .


ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத பட்சத்தில் அனுமதியை மீறி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட முயன்ற பாஜக இளைஞர் அணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

பின்னர் காவல் துறையின் அறிவுரையை ஏற்று வாகனப் பிரச்சார பேரணியை ரத்து செய்து தெருமுனை பிரச்சாரம் ஆக மாற்றி கட்சி நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றியதையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 15

0

0