‘இதுதான் எங்கள் வாழ்வாதாரம்’… அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு மனு..!!!

Author: Babu Lakshmanan
11 February 2024, 3:12 pm

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி செம்மலை, ஆர் பி உதயகுமார் ஓ எஸ் மணியன் வைகை செல்வன் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விவசாய பிரதிநிதிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களிடம் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், கூறியிருப்பதாவது :- கோவை தெற்கு பகுதியில் கடந்த 20.01.20 அன்று ஒருங்கிணைந்த வெள்ளலூர் பேருந்து நிலையம் சுமார் 168 கோடி திட்டமதிப்பீட்டில் துவக்கப்பட்டு சுமார் 58 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், திடீரென்று 10.02.22 அன்று கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையம் இங்கு அமைந்தால் இங்கு வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆனால், இதைப்பற்றி விளக்கம் கேட்ட போது வங்கியின் கடன்ற பெறாததும் மற்றும் அரசிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்கள். ஆனால், இன்றைய தேதி வரை கட்டுமானப் பணிகள் துவங்கப்படவில்லை.

ஆகவே, கோவை தெற்கு பகுதி மேம்படவும், அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கோவை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைத்திட உடனடியாக துவக்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?