கோழி பண்ணை உரிமையாளரை கடத்திய மர்ம கும்பல் ; ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்… 3 பேர் கைது… எஸ்கேப் ஆனவர்களுக்கு வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 6:05 pm

கோழி தீவனம் வாங்க வந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பல், மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பனமடங்கி பகுதியை சேர்ந்த கோழி பண்ணை உரிமையாளர் சுரேஷ் (25) என்பவர் கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக நேற்று இரவு வேலூருக்கு சரக்கு ஆட்டோவில் வந்துள்ளார்.

அப்போது கொணவட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சுரேஷை வழிமறித்து கடத்தி கத்தியை காட்டி மிரட்டி இரண்டு லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

பின்னர் பணம் கொண்டுவர சொல்லி சுரேஷ் தனது குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளர்.தகவல் அறிந்து வந்த சுரேஷின் குடும்பத்தார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட கொணவட்டம் பகுதியை சேர்ந்த பாஷா, ரியாஸ், சித்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முனீர், நரேஷ் உள்படட 3 பேரை ஆகியோரை தேடி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?