‘எங்களை ஏன் கூப்பிடல’… திமுக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் ; அடிக்கல் நாட்டு விழாவில் சலசலப்பு!!

Author: Babu Lakshmanan
27 February 2024, 9:56 am

நகரப்புறம் மகப்பேறு கட்டிடத்தை கட்ட திமுக எம்எல்ஏ அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் பிஎம்ஜேயுகே திட்டத்தின் 1.90 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட போதிய இட வசதி இல்லாததால், இதனை அறிந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வஹிதா பேகம் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரும் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 சென்ட் நிலத்தை கட்டிடம் கட்டுவதற்காக தானமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை இயக்குனர் பொது சுகாதார மற்றும் மருத்துவத்துறைக்கு வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், அந்த இடத்தில் புதிய மகப்பேறு கட்டிடம் கட்ட குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், பேரணாம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மற்றும் நில உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆகியோர் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு பகுதியில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகளிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள் என்று கூறியதால் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் என்றும் தெரிவித்தார். இதனால், திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் இடையே சலசலப்பும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!