2 கிராமுக்காக சினிமா கூத்தாடியை கட்டிப்பிடிப்பதா… விஜய் மாணவர்கள் சந்திப்பை விமர்சித்த வேல்முருகன்.!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2025, 2:42 pm

நடிகரும் தவெக தலைவரான விஜய், கட்சியை ஆரம்பித்து தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஜனநாயகன் படம் தான் கடைசி என அறிவித்துள்ள விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதனிடையே சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து, விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறார்.
இந்த வருடமும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக இன்றும் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். அவர் கூறியுள்ளதாவது, பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளையனை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாகும் பெண்ணை, பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள் இருக்கும் போது.. சினிமா கூத்தாடி பயலை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கறாங்க.

Velmurugan criticizes Vijay's student meeting

இது என்ன ஈனப்பிறவி, தமிழனுடைய பிறவியா இது. இதுல அப்படியே விஜய் அண்ணானு சொல்றாங்க. விஜய் நடிப்பதை ரசிங்க, பாராட்டுங்க. ஆனா அப்படி செய்யக்கூடாது என பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வேல்முருகனுக்கு எதிராக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

  • thug life opening day collection is low than indian 2 movie opening இந்தியன் 2 படமிடம் தோற்றுப்போன தக் லைஃப்! பரிதாபகரமான நிலையில் கலெக்சன் ரிப்போர்ட்?
  • Leave a Reply