வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ; டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த கிராம மக்கள்… அதிர்ச்சியில் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 1:20 pm

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சிடம் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கை வயல் விவகாரத்தில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர் இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் ஒருவர் என மொத்தம் 11 பேரில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகுமாறு 11 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் கோர்ட்டு உத்தரவை அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், பயிற்சி காவலர் முரளி ராஜா இறையூர் மட்டும் கீழ முத்துக்கடை சேர்ந்த இரண்டு பேர்கள் என மூன்று பேர் மட்டும் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை இயல் கூட்டத்திற்கு ஆஜராகி உள்ளனர்.

வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீஸாரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பான சூழலை ஏற்பட்டுள்ளது. இன்று ஆஜராகி உள்ள மூன்று நபர்களுக்கு மட்டும் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!