இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு… திருச்செந்தூர் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தில் ஓபிஎஸ் வழிபாடு!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 9:30 am

இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு… திருச்செந்தூர் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தில் ஓபிஎஸ் வழிபாடு!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்த கூடாது என பழனிச்சாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஓ.பி.எஸ்., விஸ்வரூப தரிசனம் செய்தார்.

கட்சி சின்னம், கொடியை ஓ.பி.எஸ் தரப்பினர் பயன் படுத்த கூடாது என அதிமுக தரப்பில் தொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் திருச்செந்தூர் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்தார்.

அபிஷேகத்தில் ஓ.பி.எஸ் தனத ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!