செல்போன் ரிங்டோனாக மாறிய ”வெற்றி நடைபோடும் தமிழகம்” : அரசின் சாதனைகளுக்கு குவியும் வரவேற்பு!!

4 February 2021, 12:39 pm
Vetri Nadai Podu Tamilagam- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் வெளியாகும் வெற்றிநடை போடும் தமிழகமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரகிறது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவுகளை நினைவாக்க 7.5% இடஒதுக்கீடு, மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.

Image result for முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்

இந்த சாதனை திட்டங்களை மக்களிடம் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கான சாதனை செய்தது குறித்து பிரச்சார பாடல் பத்திரிகை மற்றும் ஊடகங்களை மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது.

Image result for வெற்றி நடை போடும் தமிழகம்

வெற்றி நடை போடும் தமிழகமே என்ற பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை மக்கள் பொதுஇடங்களில் கூட பாடுவதை காண முடிகிறது. பலரும் தங்களது செல்போன்களில் ரிங்டோனாக இந்த பாடலை வைத்துள்ளனர்.

Image result for முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்

ஏன் எதிர்க்கட்சிகள் ஊடகமான பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் இந்த பாடல் ஒளிபரப்பாகியது. என்னதான் வர்த்தக ரீதியாக இருந்தாலும் அதிமுகவின் சாதனைகளை விளக்கும் பாடல் ஒளிபரப்பியது தவறு என திமுக எம்பி பகீரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது வெற்றி நடை போடும் தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் மக்களின் பிரச்சாரமாக மாறியுள்ளது, தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Views: - 132

3

0