“போதை வேண்டாம்.. பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு”.. விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுமண தம்பதிகள்..!

Author: Vignesh
27 August 2024, 10:28 am

கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் – போதை பழக்கம் ஆகியவற்றிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகளின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் அர்ஷத் – ஃபஹீமா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், மணமக்களும் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்களும் “Say No To Drugs”, “Hang the Rapist”, “Republic? Or Rape Public?” என்ற பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்பொழுது, அந்த புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வைரலாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!