போதை ஊசிக்கு அடிமையான இளைஞர்கள்: வெளியான விபரீத வீடியோ….அதிர்ச்சியில் பெற்றோர்..!!

8 July 2021, 8:56 am
Quick Share

கோவை: கோவை-உக்கடம் பில்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து போதை ஊசி போட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடந்து புகார்கள் எழுந்த நிலையில், தற்போது உக்கடம் பகுதியில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசியில் ஏற்றி, ஒருவர் மாற்றி ஒருவர் கைகளில் ஊசி ஏற்றும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பாக இது போன்ற போதை ஊசி செலுத்தி கொண்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், இந்த வீடியோ குறித்து கோவை மாநகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளம் வயதில் இது போன்று போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள், பாலியல் மற்றும் பல்வேறு விதமான குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.

இளைஞர்களின் வாழ்கையை சீரழிக்கும் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 203

0

0