பாறையில் வழுக்கி விழுந்து யானை பலி? நெஞ்சை பதற வைத்த வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2025, 8:05 pm

சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம்.

இதையும் படியுங்க: தாய் சொல்லும் வார்த்தையா இது? தமிழக டிஜிபி அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு!

இந்நிலையில் இன்று குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே மலையின் உச்சியில் இருந்து வரும் அருவியின் பாறையில் வழுக்கி விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்தது.

இந்த தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக முதுமலையிலிருந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் பெண் காட்டு யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!
  • Leave a Reply