மஞ்சுவிரட்டை பார்க்க மலை மேல் குவிந்த பார்வையாளர்கள் : காளை முட்டி 4 பேர் பலியான சோகம்!!!
27 February 2021, 12:25 pmசிவகங்கை : சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று சீறி பாய்ந்து சென்ற போது மாடு முட்டியதில் பார்வையாளர்கள் 4 பேர் பலியாயினர் , 94 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் நடைபெறும் மஞ்சுவிரட்டை முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ண மங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.
கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து காளைகளுக்கும் வேட்டி, துண்டு வழங்கப்பட்ட பிறகு தொழுவிலிருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும், மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன.
தொழுவில் இருந்து பதிவு செய்யப்பட்ட 111 மாடுகள் மட்டும் ஜல்லிகட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. மேலும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயித்திற்கும்க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டு மாடுகளாகளாக அவிழ்த்துவிடப்பட்டது.
இதில் சீறி பாய்ந்து சென்ற மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் திருப்பத்தூர் புதூரைச் சேர்ந்த சேது (வயது 45), ஆத்தங்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 26), நாமனூரைச் சேர்ந்த மருது (வயது 40), மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்த மகேஷ் (வயது 23) ஆகிய 4 பேர் பலியானர்கள் .
மேலும் 94 பேர் காயமடைந்தனர். மலை குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணான பெண்கள், சிறுவர்கள் மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர்.
0
0