விஜய், அஜித் இணைந்து நடிக்கும் புதிய படம்.? அதுவும் அந்த இயக்குனர் படத்தில்.? வெளியான புதிய தகவல்..!

Author: Rajesh
20 June 2022, 6:52 pm

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களையும், பல வெற்றி படங்களையும் கொடுத்து முன்னணி கதாநாயகர்களாக திகழும் இரு ஜாம்பவான்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கும் ஆண், பெண் என இருபால் ரசிகர்களும் ஏராளமாக உள்ளனர், இந்த இருவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போதும் அன்றைய தினம் திருவிழா போல மக்கள் வெள்ளம் அலைமோதும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதேபோன்று இந்த இரு கதாநாயகர்களின் ரசிகர் கூட்டங்களுக்கு இடையே நடக்கும் சண்டை சச்சரவுகளும் நன்கு அறிந்த விஷயம். இணையத்தில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் பற்றியும் ஏதேனும் பேசி இணையதளத்தை போர்க்களமாக மாற்றும் சம்பவம் காலங்காலமாக நடந்து வருகிறது.

இவர்கள் ஆரம்ப கட்டத்தில் இணைந்து நடித்த படம் தான் ராஜாவின் பார்வையிலே, ஜானகி சௌந்தர் இயக்கத்தில் 1995ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய், அஜித் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் என்ற தகவலையும் அவர் கூறி இருப்பதாக தெரிகிறது. அப்படி ஒருவேலை இருவரும் இணைவது உறுதியானால். இவர்’களது ரசிகர்கள் இணையதளத்தையே ஆக்கிரமித்து விடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மங்காத்தா’ என்பது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?