பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுவது கேட்கவில்லையா ஸ்டாலின் Uncle? விஜய் பரபரப்பு பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2025, 5:56 pm
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். “தவறு செய்தால், அதை அறிந்து செய்தால், அது கபட நாடகம். அது மு.க.ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் விடமாட்டோம்,” என்று கூறினார்.
உங்கள் ஆட்சி ஊழல் இல்லாமல் நேர்மையாக உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? பதில் சொல்லுங்கள், அங்கிள்! பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் கதறும் குரல் ஸ்டாலின் அங்கிளுக்கு கேட்கவில்லையா?
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல், அவர்கள் தன்னை ‘அப்பா’ என்று அழைப்பதாகக் கூறுகிறார். ஸ்டாலின் அங்கிள்… Its Very Wrong Uncle என்று விஜய் கடுமையாக விமர்சித்தார்.
