வருமானத்தை மறைத்ததால் ரூ.1.50 கோடி அபராதம் : நீதிமன்றம் படியேறிய தவெக தலைவர் விஜய்!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2025, 6:52 pm
வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2019-ஆம் ஆண்டில் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை, 2022-ஆம் ஆண்டில் தாமதமாக வெளியிட்டிருப்பதால், அது செல்லாது என தனது மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில், வருமான வரிச் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்நிலையில், இதேபோன்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மேலான விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
