மக்கள் மனம் கவர்ந்த விஜய் ரசிகர்கள்… முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 1:33 pm

வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாடியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது, அவரது ரசிகர்கள் முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக இன்று வெளியான வாரிசு திரைப்படத்தையொட்டியும், பொங்கல் திருநாளையொட்டியும், திருச்சி புதூரில் உள்ள சாந்தி அமைதி முதியோர் இல்லத்தில் ராஜா தலைமையில் “வாரிசு பொங்கல்” கொண்டாடப்பட்டது.

முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து முதியோர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. முன்னதாக, அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு இலவச சேலைகள் வழங்கி வாரிசு பொங்கல் மகிழ்ச்சி அங்கு பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விஜய் ரசிகர்கள் பவுல் சரண்ராஜ், நடராஜன், பிரகாஷ், நசீர், தொட்டி ஹரிகரன், மனச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?