Uncleனு சொல்லிருக்காரு..திமுக ஏன் பொறுமையா இருக்கு? கோமாளி அறிக்கை தரும் விஜய் : விளாசும் பாஜக பிரமுகர்!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2025, 5:54 pm
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் பாஜக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், விஜய்யால் புதுச்சேரிக்கு எந்த ஒரு மாற்றமும் வராது.அவர் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்களின் மாநாடு .
கூட்டத்தை சேர்ப்பதற்காகத்தான் எம்ஜிஆர், விஜயகாந்த் படங்களை வைத்து அவர் மாநாடு நடத்தினார். எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த்தின் கொள்கைகளை பின்பற்ற அவர்களது கட்சிகள் இருக்கும் போது விஜய் ஏன் அவர்கள் கொள்கை கூற வேண்டும்.?
விஜய்க்கு எந்த ஒரு கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை.. சினிமாவில் பணம் சேர்த்து விட்டோம். இனி அரசியலுக்கு வருவோம் என அவர் வந்துள்ளார் என கூறினார்.
பாஜகவின் எதிரி என சொல்வதற்கு அவருக்கு அருகதையே இல்லை. அந்த அளவிற்கு அவருக்கு கொள்கையும் அறிவும் இல்லை கோமாளித்தனமான அறிக்கையை விஜய் கொடுத்துள்ளார்.
சினிமா டயலாக் போல ஒரு மாண்புமிகு என்று சொல்லக்கூடிய தமிழக முதலமைச்சர் விஜய் அங்கிள் என்று கூறி இருக்கிறார். இதை எப்படி திராவிட முன்னேற்ற கழகம் பொறுத்துக் கொண்டிருக்கிறது என ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

விஜயுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டுவது குறித்து கேட்டதற்கு முதலமைச்சர் ரங்கசாமி புத்திசாலி விஜயுடன் பேசுவதால் மட்டும் அவர் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்வார் என்று கூற முடியாது.

எந்த அரசாங்க மக்களுக்கு நல்லது செய்யும் என்று புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு ரங்கசாமி புத்திசாலி…விஜயால் ஆட்சி அமைக்க முடியாது. அவருக்கு எத்தனை சதவித வாக்குகள் என இந்த தேர்தலில் தான் தெரியும்.

அவருடன் நட்பு ரீதியாக பேசுவாரே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியை தான் ரங்கசாமி மீண்டும் கொண்டு வருவார் பாஜக தலைவர் ராமலிங்கம் கடுமையாக விஜய் தாக்கி பேசினார்.
