Mr.Prime Minister என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் அரசியலில் வளரவில்லை : கவனத்துடன் பேசுங்க..!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2025, 1:53 pm
திருநெல்வேலியில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுகிறார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜகவை சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, பாசிசம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியுமா என்று தெரியவில்லை. 24ம் தேதி விளாவாரியாக கள்ளக்குறிச்சியில் நான் பேசுகின்றேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.
இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.. என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று பேச்சில் கவனத்துடன் பேச வேண்டும்.

நடிகர் விஜய் கொள்கை ரீதியாக பேச வேண்டும். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை என்றார்.
