பக்காவான குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகும் ‘தளபதி 66’!.

Author: Rajesh
15 May 2022, 1:39 pm
Quick Share

சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து ‘தளபதி 66’ படத்திற்கான பணிகளை படக்குழு கடந்த மாதம் கோலாகலமாக பூஜையுடன் தொடங்கியது. தெலுங்கில் பல சிறப்பான படங்களை கொடுத்த வம்சி பைடிப்பள்ளி ‘தளபதி 66’ படத்தை இயக்குகிறார்,

இந்த படத்தில் முதல் தடவையாக விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர். ஏற்கனவே நடிகர் பிரபு விஜயுடன் இணைந்து புலி மற்றும் தெறி போன்ற படங்களில் நடித்திருந்தார், அதேபோல நடிகர் பிரகாஷ் ராஜும், விஜயுடன் இணைந்து கில்லி, போக்கிரி மற்றும் வில்லு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் சரத்குமார் முதல்தடவையாக விஜயுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் நடித்திருந்த துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற செண்டிமெண்ட் படங்களை போன்று இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் ஒரு பக்காவான குடும்ப படம் வெளியாகி பலரையும் கொண்டாட வைக்கப்போகிறது. படத்தின் கதையானது அனைவரையும் கவரும் வகையில் அமையும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஏகப்பட்ட நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்கின்றனர்.

Views: - 883

11

0