இன்னும் ஒரு போஸ்டிங் போடுங்க.. உத்தரவிட்ட விஜய்.. நாளை முக்கிய அறிவிப்பு?

Author: Hariharasudhan
28 January 2025, 3:30 pm

தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு மேலும் ஒரு நிர்வாகியை அமைக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை: 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து, கட்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இந்த நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, கட்சியின் நிர்வாக வசதிக்காக 234 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுவதாக சமீபத்தில் விஜய் அறிவித்தார். மேலும், இது குறித்து, கடந்த ஜனவரி 24ஆம் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய பட்டியலை விஜய் வெளியிட்டார். மேலும் தொடர்ந்து, மற்ற மாவட்டச் செயலாளர்களின் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணியிலும் தவெக தீவிரம் காட்டி வருகிறது.

Vijay ordered to strengthen TVK booth committee

ஏற்கனவே ஒரு பூத்துக்கு ஐந்து முதல் ஏழு கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் மேலும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டு உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டுகள்.. யூடியூபர்களுக்கு இடையே மோதல்.. சைபர் கிரைம் வரை சென்றது ஏன்?

அதேநேரம், சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இப்போதே விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கட்சி தொடங்கி ஓராண்டு முடிவடையும் நிலையில், அன்றைய நாளில், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, கிளை வாரியாக விழாவை சிறப்பாக நடத்தி அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பொதுமக்களை நேரடியாகச் சென்று சேரும் வகையில் நலத்திட்டங்களை அளிக்கும்படி கட்சித் தலைமை ஆர்டர் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!