முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க விஜய் எனது தம்பி : கமல்ஹாசன் பளிச்!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2025, 10:52 am
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தவெக தான் முதன்மைப் போட்டியாளராக இருக்கும் என உறுதியாகத் தெரிவித்தார்.
“நான் மார்க்கெட்டை இழந்து, ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு அடைக்கலம் தேடி வரவில்லை. முழு படைக்கலனோடு அரசியல் களத்தில் இறங்கியுள்ளேன்,” என்று அவர் தனது உரையில் வீராவேசமாகக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன், விஜய்யின் கருத்து குறித்து நகைச்சுவையாகவும், அழுத்தமாகவும் பதிலளித்தார்.

“என்ன கருத்து சொல்வது? அவர் என் பெயரைச் சொன்னாரா? யாருடைய பெயரையாவது குறிப்பிட்டாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் எப்படி பதில் அளிப்பது? அவர் என் தம்பி” என்று கூறி, புன்னகையுடன் தனது பதிலை முடித்தார்.
