திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜய்… நாமக்கல், கரூரில் இன்று பிரச்சாரம்!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2025, 10:31 am
திருச்சி விமான நிலையத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திருச்சி வந்தார் விஜய்.
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் இன்று மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்.
பின்னர் அவர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திலிருந்து நம்பர் ஒன் டோல்கேட் வழியாக தொட்டியம் முசிறி வழியாக நாமக்கல் சென்றார்.

விஜய் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் வி ஐ பி நுழைவு வாயில் அருகே அதிக அளவு திரண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த முறை விஜய் திருச்சி வந்த பொழுது ரசிகர் அதிக அளவில் விமான நிலையத்திற்கு வந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனால் இன்று விமான நிலைய நுழைவு வாயிலேயே பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும்,தொண்டர்கள் யாரும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.
