வீட்டுக்குள் இருந்தால் திமுக எப்படி பயப்படும்… முழுநேர அரசியலுக்கு வாங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்!
Author: Udayachandran RadhaKrishnan9 September 2025, 6:27 pm
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஓபிஎஸ், டிடிவி இருவரும் என்டிஏ கூட்டணியில் இருக்க வேண்டும். அவர்களிட தொலைபேசியில் பேசும் போது, இருவரும் கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
சில வருத்தத்தால் அவர்கள் கூட்டணியை விட்டு விலகியிருக்கிறார்கள், இன்னும் காலம் இருக்கிறது, அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
அப்போது, தவெகவை கண்டு திமுக பயப்படுகிறது என விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுசக்தி என கூறும் தவெக 24 மணி நேரமும் அரசியலில் ஈடுபட வேண்டும். சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என விஜய் நினைக்கிறார்.

முழு நேர அரசியலில் விஜய் களத்தில் இருந்தால் மட்டுமே திமுக பயப்படும் என கூறிய அவர், தவெக சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய அவர், எதிர்ககட்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது தமிழ்நாட்டில் வழக்கமானது தான் என கூறினார்.
