விஜயதரணிக்கு விளவங்கோடு வழங்ககூடாது : குமரியில் காங்கிரசார் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2021, 5:42 pm
Congress Protest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்க கூடாது என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கண்டன ‌கோஷம் எழுப்பி சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும் இந்த மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரும் 3 தொகுதிகளில் திமுக வினரும் வெற்றி பெற்றிருந்தனர்.

இவர்களில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் பெண் உறுப்பினராக இருந்தார். இவர் அதிகமாக தொகுதியில் இருப்பது இல்லை எனவும் கட்சி உறுப்பினர்களுக்கோ தொகுதி மக்களுக்கோ எதுவும் செய்யவில்லை எனவும் அவர் மீது கட்சி தொண்டர்கள் எதிர்பலைகளை தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்க கூடாது என்றும் தொகுதிக்கு உட்பட்ட நபர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து விஜயதரணிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மார்த்தாண்டம் சாங்கை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு இருந்து சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

Views: - 53

0

0