விஜய் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை… நாளை திட்டமிட்டபடி நடைபெறுமா? பரபரப்பை கிளப்பிய தவகெ பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2025, 6:19 pm

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் நாளை திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள இருக்கும் பிரச்சார பயணத்தை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில் திருச்சி துவங்கி அரியலூர், பெரம்பலூர் பரப்புரை நடைபெறுகிறது.

12 நாட்கள் இங்கு முகாமிட்டு நிர்வாகிகள் அனுமதி வாங்கி உள்ளனர். இன்று தான் பெரம்பலூர், அரியலூர் அனுமதி கிடைத்துள்ளது.

23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது வரை இது போன்ற சுற்று பயணத்திற்கும் எந்த கட்சிக்கும் இப்படி நிபந்தனை விதிக்கப்பட்டதில்லை.

கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டாம் என பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

குச்சி, கம்பு, ஆயுதங்கள் வைத்திருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். கட்சிக்கொடி வைத்திருந்தாலும் அது கம்பு தான் இது போன்ற நிபந்தனைகள் எந்த கட்சிக்கும் போட்டதில்லை.

இதில் எந்த விதிமுறை மீறப்பட்டால் எந்த நேரத்திலும் இந்த பயணம் நிறுத்தப்படும் காவல்துறை நிபந்தனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சார பயணத்திற்கு எல்லாவித முட்டுக்கட்டைகளையும் அரசு போடுகிறது. திமுகவின் ஆதரவோடு பாஜகவின் கூட்டணியான அதிமுக கூட்டங்கள் நடக்கிறது. எல்லாவித நிபந்தனைகளையும் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும்பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கடுமையான நிபந்தனைகள் காவல்துறை கொடுத்துள்ளனர் ஏன் நீங்கள் நீதிமன்றம் செல்லவில்லை என்ற கேள்விக்கு? ஒரு நாள் பயணத்திற்காக 12 நாள் போராடி உள்ளோம்.

பெரும்பாலான இடங்களில் அதிமுகவுக்கு எந்த நிபந்தனைகளும் கொடுக்கவில்லை திமுக அரசு முழு ஆதரவு கொடுத்துள்ளது. பொதுச் செயலாளர் போகும்போது பத்து நபர் மட்டுமே உடன் சென்றனர். மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் அனுமதி கிடைத்ததால் அங்கு சென்றோம். இதற்கு வழக்கு கொடுத்துள்ளனர். காவல்துறை கொடுத்த கேள்வியில் நம் யுனிவர்சிட்டி தேர்வை எழுதிவிடலாம்.

பேனர் வைப்பதற்கு ஏன் உங்களுக்கு காவல் துறை அனுமதி தரவில்லை? மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் எங்கள் தலைவர் என்பதால்.

தலைவர் ஆட்சி அமைய வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள் 2026 பெரிய மாற்றம் உண்டாகும். எந்த இடத்திலும் சட்டம் மீறப்பட்டதில்லை.

ஏன் சனிக்கிழமை மட்டும் இந்த பிரச்சார பயணம் என்ற கேள்வி என்பதே என்ற கேள்விக்கு? வாரத்திற்கு ஒரு நாள் சென்றபோது 12 நாட்கள் போராடி அனுமதி பெற்று இருக்கிறோம் இந்த தினந்தோறும் என்றால் எப்படி என்ன சொல்ல முடியும்.

திருச்சி தேர்வு செய்தது ஏன்? திருச்சி வரலாறு படைத்த பகுதி என்பதால் திருச்சியில் இந்த பிரச்சார பயணத்தை துவக்குகிறோம் என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!