300 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது மாநாடு.. மதுரையில் பூமி பூஜையை நடத்திய தவெக.!!
Author: Udayachandran RadhaKrishnan16 July 2025, 10:51 am
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது.
மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா இன்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைய உள்ளது. இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மாநாட்டிற்கான அனுமதி மனுவை கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் அனைத்து நிர்வாகிகள் மகளிர் மற்றும் பல இதில் கலந்து கொண்டனர்.
