வேற எந்த ஒரு தமிழ்படமும் செய்யாத சாதனை.. உலகளவில் கலக்கும் விக்ரம்.. உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்.!

Author: Rajesh
26 June 2022, 12:46 pm
Quick Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3- ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் இதுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழுவினர் போஸ்டருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், விக்ரம் படத்தின் மொத்த வசூல் நாளைக்குள் உலக அளவில் ரூ400 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக எந்த ஒரு தமிழ்படமும் இந்த வசூலை எட்டவில்லை என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி கமல் மட்டும் அல்லாது அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Views: - 251

7

0