பிரபல நடிகையை பார்த்து மெய் மறந்த நடிகர் விக்ரம்.. திருமணமான நடிகையை இப்படியா பாக்குறது என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
29 September 2022, 5:15 pm
vikram - updatenews360
Quick Share

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வரும் செப்டம்பர் 30 ஆம்தேதி வெளியாகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையில் ரவி வர்மா ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பிரமோஷன் இப்படத்தின் பிரமோஷனுக்காக அப்படத்தில் வேலை செய்தவர்கள் நட்சத்திரங்கள் உட்பல பலர் பேட்டிகொடுத்தும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள்.

அப்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை என விமானத்தில் பறந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராய், விக்ரம் கன்னத்தில் தடவிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அதேபோல் பிரஸ்மீட்டின் போது, இருவரும் இரு படத்தில் நடித்திருக்கிறோம், ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை. ஏன் ஐசு என்று செல்லமாக கூறினார். அதேபோல் மிகப்பெரிய குடும்பத்தின் மருமகளாக, நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், குடும்பம் குழந்தை என்ற பிசியான வாழ்க்கையில் நடிப்பை தொடர்ந்திருக்கிறார்.

படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அவரது நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டு போய்விடுவோம். நானும், அக்‌ஷன் என்று கூறினால் என்னுடைய நடிப்பே மறந்து போகும் அளவிற்கு அவரை மெய்சிலிர்த்து பார்த்துக்கொண்டே இருப்பேன் என்று பிரம்மிப்பாக கூறியிருந்தார் விக்ரம்.

இதற்கு பலர் ஒரு கல்யாணமாகிய நடிகையை இப்படியா பாக்குறது சியான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 318

0

0