இனி விக்ரம் தான் No.1.. உதயநிதி ஸ்டாலினே வெளியிட்ட பதிவு வைரல்.!

Author: Rajesh
17 June 2022, 12:56 pm

கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 320 கோடிக்கும் மேல் வசூல் செய்து தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது விக்ரம். தமிழகத்தில் அதிக வசூலை திரைப்படம் என்ற ஒரு சாதனை பாகுபலி 2-விற்கு உள்ளது. இந்த திரைப்படம் 155 கோடிக்கு மேல் வசூல் செய்து NO.1 திரைப்படமாக இருந்து வருகிறது.

இதனிடையே தற்போது அந்த வசூலை நெருங்கியுள்ள விக்ரம் விரைவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறவுள்ளது. இதனை இப்படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினே டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். அவரின் அந்த பதிவில் விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் அனைத்தையும் இப்படம் முறியடிக்க இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!