விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக ஓட்டு யாருக்கு? அமைச்சர் பொன்முடி காரசார பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 10:10 am
ponmudi---updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காணை அடுத்த கொசப்பாளையத்தில் நடந்தது.

தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-இந்த இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். காரணம் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளனர்.

இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை. அ.திமு.க.வினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம்முறை தி.மு.க.,விற்கு தான் வரும். சமூக நீதி பற்றி பேசும் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், இத்தேர்தலில் பா.ஜ.க, வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி வாரி கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

சமூக நீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தான் தகுதி உண்டு, காரணம் ஜாதி, மதம் பார்த்து தி.மு.க., எதையும் செய்வதில்லை. சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.தி.மு.க., மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற கட்சிகள் ஏதுவும் கிடையாது. சமூக நீதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தார்.

Views: - 183

0

0