“நான் அனுபவித்த கொடுமைகளின் உந்துதல் தான் இந்த முடிவு,உங்களிடம் மடிப்பிச்சைக் கேட்கிறேன்!”- தேர்தல் களம் இறங்கிய ஸ்ரீமதியின் தாயார் விளக்கம்!”

Author:
21 June 2024, 5:51 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினர் காரசாரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர் இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இறந்த ஸ்ரீமதியின் தாயார் திடீரென தேர்தலில் போட்டியிட மீட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,

நான் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் அல்ல. அதன் அனுபவத்தில் தான் தற்போது இடை தேர்தலில் போட்டியிடப் போகிறேன். என் மகள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நிகழக் கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் தனி மனிதனாகவும்,சாதாரண மனிதராகவும் இருந்தால் போதாது, ஏதேனும் பொறுப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்களுக்கு என்னால் முடிந்த வரையிலான சேவையை செய்ய ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் இந்த இடைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.சேவை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?