தேர்தலை புறக்கணித்த கிராமம்’.. காத்து வாங்கும் வாக்குச்சாவடிகள் : சொந்த ஊர் மக்களால் ‘ஷாக்’ ஆன அமைச்சர் துரைமுருகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2021, 2:13 pm
Katpadi boycott -Updatenews360
Quick Share

வேலூர் : காட்பாடி அருகே அம்முண்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஊரக ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி பஞ்சாயத்தில் மொத்தம் 2049 வாக்குகள் உள்ளன. இதில் பெரும்பாலும் பொதுப்பிரிவினர் வசித்து வரும் நிலையில் பட்டியல் இனத்தவருக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு முறை ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் காட்பாடி யூனியன் அலுவலகத்தில் நடந்த வேட்புமனு தாக்கலில் கடைசி நாள் வரை அம்முண்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதேபோன்று அந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளனர்.

அதேநேரம் ஒன்றிய ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் மட்டும் அம்முண்டி பஞ்சாயத்தில் நடந்து வருகிறது.

ஆனால் இந்த பதவிகளுக்கான தேர்தலின்போதும் தங்களின் வாக்குகளை செலுத்தப் போவதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 713

0

0