ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை கண்டித்து போராட்டம் : நள்ளிரவில் பாஜகவினர் கைது செய்து விடுதலை!!

23 September 2020, 10:16 am
Villupuram BJp Arrest - updatenews360
Quick Share

விழுப்புரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்த போலீசார் நள்ளிரவில் விடுதலை செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆங்காங்கே அனுமதி இன்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடி ஏற்றி இருந்தனர். அனுமதி இல்லாமல் கொடியேற்றப்பட்ட கம்பங்களை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை கண்டித்து பாஜகவினர் அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல்துறையினர் கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முயன்றனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மனு அளிக்க வேண்டும் என்றால் ஐந்து பேர் மட்டும் செல்ல வேண்டும். மற்றவர்கள் இங்கே இருக்க வேண்டும் என்று தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக வினர் அங்கேயே அமர்ந்து காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.

பின்னர் பாஜகவினர் 56 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் நள்ளிரவு அவர்களை விடுதலை செய்தனர்.

Views: - 9

0

0