பாஜக சுவர் விளம்பரத்தை அழித்த விசிக.! விழுப்புரத்தில் பரபரப்பு.!!

4 August 2020, 3:59 pm
Villupuram BJP Vs VCK - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பாஜக சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக சார்பாக எழுதப்பட்ட மத்திய அரசின் சுவர் விளம்பரங்களை திருக்கோவிலூர் அரகண்டநல்லூர், கண்டமங்கலம், கானை ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அழித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த காவல் நிலையங்களில் புகார் எடுக்கப்படாததை கண்டித்து இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதிகளவில் ஒன்றுகூடிய தொண்டர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாஜக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் இதுகுறித்துப் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்

Views: - 9

0

0