இயற்கை பேரிடரால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி.! நேரில் சென்று காசோலை வழங்கினார்.!!
1 August 2020, 3:39 pmவிழுப்புரம் : இடி மின்னலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் வீதம் நான்கு பேர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் காசோலையை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்து இருநூறு பேருக்கு 636 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருள் மற்றும் அரிசி தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து இடி மின்னல் தாக்கி உயிரிழந்த விழுப்புரம் மற்றும் திருநாவலூரில் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் வீதம் 16 லட்சத்திற்கான காசோலையும் அமைச்சர் சிவி சண்முகம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு வழங்கினா. தொடர்ந்து கொரோனா கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறை காவல்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் கொரோனா கட்டுப்படுத்துவதற்கான, நடவடிக்கைகளை அந்தந்த பகுதிகளில் துரிதமாக எடுப்பதற்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் உணவு பொருட்கள் தங்குதடையின்றி முறையாக வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு அதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆலோசனை வழங்கினார்.
0
0