எப்படி என் கணவனை அடிக்கலாம்.! எஸ்.ஐ கன்னத்தில் “பளார்“ விட்ட “பாசக்கார மனைவி“.!!

7 July 2020, 4:31 pm
Villupuram Issue - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பசுமை வீடு கட்டுவதில் புகார் எழுப்பியவரை போலீசார் தாக்கியதால் கோபமடைந்த புகார்தாரரின் மனைவி காவலை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே அரசு பசுமை வீடு கொடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு ஊரில் பட்டியலினப் பகுதியில் வீடு வழங்கபட்டது. இதில் வீடு கட்ட மணல் சிமெண்ட போன்ற மூலபொருள்கள் பயணாளிகளுக்கு அரசு வழங்கவேண்டும்.

அப்படி ஒரு குடும்பத்தினருக்கு முதல் ரசீதுக்கான வேலை எதுவும் தொடங்காமல், 2வது பில்லுக்கு கையெழுத்து கேட்டுள்ளனா். முதல் பில்லுகான வேலை எதுவுமே தொடங்காமல் எப்படி 2வது பில்லுக்கு கையெழுத்து கேட்கிறீா்கள் என்று பஞ்சாயத்து கிளா்க்கை குடும்பத் தலைவன் கேட்டுள்ளார்.

இது தொடர்பான புகாரில், எஸ்.ஐ ஒரு போலீஸை அழைத்து கொண்டு சம்மந்தபட்ட பகுதிக்கு சென்று கிளா்க் சொன்ன அந்த நபா் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் மதுபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எஸ்.ஐ. எழுப்பி இருக்கிறாா். அப்போது அந்த நபாின் மனைவி அவா் குடித்துள்ளாா் அதனால் இப்ப எழுப்பாதிங்க என்று கூறியதாக சொல்லபடுகிறது.

இதை கேட்காமல் அந்த எஸ்.ஐ அவரை எழுப்பியபோது அவா் போதையில் ஏதோ பேசியுள்ளாா். இதனால் கோபமடைந்த எஸ்.ஐ அவாின் முகத்தில் பலமாக தாக்கியதால் மூக்கு, வாய் போன்ற பகுதியில் காயம் ஏற்பட்டு இரத்தம் பொல பொலவென வந்துள்ளது.

இதனால் அங்கு மக்களும் கூடிவிட்டனா். வாய் மொழியாக புகாா் சொன்னால் நீங்க எப்படி வராலாம் என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து மேலும் வீடு தந்ததாக முறைகேடு செய்து வீடு கொடுக்காமல் வீடு கட்டிவிட்டதாக பி.டி.ஓ., உதவி பி.டி.ஓ., மற்றும் கட்டிட ஒப்பந்தார் மற்றும் பஞ்சாயத்து கிளா்க் ஆகியோா் பில் போட்டு எடுத்து கொண்டதாகவும் அதற்கான நெட்டில் எடுத்த பிரிண்ட்அவுட்டை காட்டி நீங்கள் இந்த அதிகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பீா்களா? என்று மக்கள் விவாதித்து கொண்டு இருந்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் அடிபட்ட நபரும் அவரது மனைவியும் எஸ்.ஐயிடம் ஏன் அடித்தாய் எப்படி அடிப்பாய் என்று வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தபோது அடிபட்டவாின் மனைவி, எஸ்ஐ கன்னத்தில் பளார் விட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.