அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோகும் எல்லீஸ் அணைக்கட்டு… 50 கிராம மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறி..?

Author: Babu Lakshmanan
6 November 2021, 11:53 am
villupuram dam - updatenews360
Quick Share

விழுப்புரம் அருகே பொதுப்பணி துறை அலட்சியத்தால் பழமை வாய்ந்த அணைக்கட்டின் உடைப்பால், 50 கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லீஸ் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைகட்டின் வலது மற்றும் இடது புறம் தலா 4 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அணைகட்டின் வலது மற்றும் இடதுபுறம் உள்ள ஷட்டர் மூலம் ஏரளூர் வாய்க்கால், ரெட்டி வாய்க்கால், ஆழங்கால் வாய்க்கால், மரகதபுர ஆகிய கிளை வாய்க்காலுக்கு எல்லீஸ் அணையின் வழியாக தண்ணீர் செல்வது வழக்கம்.

இந்த அணைக்கட்டின் மூலம் 20,500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயி நிலங்களுக்கு பாசன வசதியும், 50 மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த தடுப்பணையின் மூலம் பயன்பெற்று வந்தது. தற்போது அணை உடைப்பின் காரணமாக நீர் சேமிப்பின்றி வெகுவாக எதிர்காலத்தில் ஆழ்துளைகிணறு மற்றும் விவசாய கிணறுகளில் நீர் குறைந்து நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இந்தபகுதி முழுவதும் விவசாயத்தை நம்பிய பெரும்பாலும் மக்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெய்த பருவ மழையின் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பணை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பலவீனமாக இருந்த தடுப்பணையை பொதுப்பணித்துறையின் அதிகாரிகள் அணையை பராமரிக்காமல் விட்டுவிட்டதால், அதன் எதிரொலியாக தற்போது அதிக நீர்வரத்து காரணமாகவும் தடுப்பணையில் சில தினங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது.

இந்நிலையில் அதிகளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அணைகட்டு எப்போது அடியோடு சாய்ந்து விழுமோ என அபாயத்தில் உள்ளது. மேலும் அப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துகொண்டே வருவதால், தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், பொதுமக்கள் சிறுதும் ஆபத்தை உணராமல், அச்சமின்றி உடைந்துள்ள அணைக்கட்டு பகுதிகள் அருகில் சென்று குளித்தும், மீன் பிடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்களை அப்பகுதியில் செல்லவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம்
உயிரிழப்பை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகையும், அணைகட்டு செல்லதவாறு தடுப்புகள் அமைத்தும் துரித
நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 306

0

0