கோவையில் ஊரடங்கு விதிகளை மீறினால் ரூ.500 அபராதம்: மாநகர காவல் துணை ஆணையர் அதிரடி அறிவிப்பு..!!

14 May 2021, 1:26 pm
cbe curfew - updatenews360
Quick Share

கோவை: கோவையில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு ரூ. 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து விதியை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவை மாநகர பகுதியில் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளதாகவும், ஊரடங்கு விதியை மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பதாகவும், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்று அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்..

Views: - 127

0

0