11 மணிக்கு வரேன்… பாய் எடுத்து வை : மாணவியிடம் அத்துமீறல் : ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் கீழ்த்தரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 1:01 pm

கோவை பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுப்பதற்காக காரமடை அடுத்து உள்ள கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் அய்யாசாமி (வயது 39) என்பவர் வந்து உள்ளார்.

தொடர்ந்து அவர் ஏழாம் வகுப்புக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அந்த ஆசிரியரிடம் எங்கள் வகுப்பிற்கு எப்போது பாடம் எடுக்க வருவீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு ஆசிரியர் அய்யாசாமி, இரவு 11 மணிக்கு வருகிறேன் பாய் எடுத்து வை என்று சொல்லி உள்ளார்.

இது சம்பந்தமாக அந்த மாணவி, ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் மூலம் பெரியநாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை மேற்கொண்டதில், நடந்தது உண்மை என்று தெரிய வந்ததன் பேரில் அய்யாசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!