கடலூரில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்…! வீடுகள், படகுகள் தீ வைப்பு…! பதற்றம் நீடிப்பு

2 August 2020, 11:10 am
Quick Share

கடலூர்: கடலூர் அருகே நடைபெற்ற மோதல் குறித்த விசாரணையில் 6 தனிப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன.

தாழங்குடா கிராமத்தில் இந்த பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதலுக்கு தேர்தல் முன் விரோதமே காரணம் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பின்னர் ஏற்பட்ட பயங்கர மோதலில் 25 படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதனை அடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் குறைந்தபாடில்லை. மோதல் தொடர்பாக 60க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவைத்து எரிக்கப்பட்ட படகுகள், சூறையாடப்பட்ட வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் கூறி உள்ளனர்.

Views: - 0

0

0