விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

Author: Selvan
24 February 2025, 5:37 pm

ICC விதிமுறையை மீறிய கோலி

இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப காலமாக இவருடைய மோசமான பேட்டிங்கால் பெரும் விவாத பொருளாக மாறினார்.

இதையும் படியுங்க: ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் தொடரில் தன்னுடைய அசத்தலான பேட்டிங் திறமையால் சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார்,ஆனால் அவர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ICC விதிமுறையை மீறினார்,அப்போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் நடுவரிடம் சென்று முறையிடாததால் அதிலிருந்து தப்பித்தார்,ஆம் ஹாரிஸ் ரவூப் வீசிய 21 வது ஊரின் போது விராட் கோலி கவர் பாயிண்ட் திசையில் பந்தை அடித்து சிங்கிள் அடிப்பார்,பாகிஸ்தான் பீல்டர் அருகில் இருந்ததால் வேகமாக அந்த ரன்னை ஓடி முடிப்பார்,அப்போது பீல்டர் கோலியை ரன் அவுட் செய்யும் நோக்கில் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எறிவார்,ஆனால் கோலி மறுபுறம் கிரீஸை அடைந்தவுடன் பீல்டர் வீசிய பந்தை பிடிக்க முயல்வார்.

Virat Kohli vs Pakistan Champions Trophy 2025

அதாவது இந்த செயல் obstructing the field அல்லது மைதானத்தில் தடங்கல் ஏற்படுத்துதல் என்கிற விதிப்படி தவறு,MCC கிரிக்கெட் சட்டத்தில் 37 வது விதியாக இது உள்ளது,இந்த விதிமுறையை தான் நேற்று விராட் கோலி மீறியுள்ளார்,பாகிஸ்தான் வீரகள் நடுவரிடம் இது குறித்து அப்போது முறையிட்டு இருந்தால் விராட்கோலி 41 ரன்னுக்கு ஆட்டமிழந்திருப்பார்,அவர் பக்கம் நேற்று அதிஷ்டம் இருந்ததால் அதிலிருந்து தப்பித்து சதம் அடித்தார்,இதை நேற்று போட்டியின் வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் கவனித்து கோலி இதுமாதிரி செயல்களை இனி வரும் போட்டிகளில் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!