கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை : சுற்றி வளைத்த போலீசார்… 4 பேர் கைது : ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்…!!
Author: Babu Lakshmanan23 December 2021, 12:58 pm
விருதுநகர் : காரியாபட்டி நான்குவழிச்சாலையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது, ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நான்குவழிச்சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய கஞ்சா விற்பனை செய்வதாக காரியாபட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காரியாபட்டி காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையிலான காவல்துறையினர் காரியாபட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் காரியாபட்டியைச் சேர்ந்த மணிகண்டன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாயி, வெள்ளையன், கார்த்திக் என்பதும், அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காரியாபட்டி காவல்துறையினர் அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
0
0