விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூக்கில் தொங்கிய கூலித் தொழிலாளி.. குடும்பப் பிரச்சனையால் விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
26 June 2021, 8:51 pm
viruthunager suicide - updatenews360
Quick Share

விருதுநகர் ; குடும்ப பிரச்சினை காரணமாகவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் வெயிலுமுத்து (31). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இரு குழந்தைகள் இருந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் வெயிலுமுத்து மன அழுத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை வெயிலுமுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விருதுநகர் சூலக்கரை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 264

0

0