கல்யாணத்துல சரக்கு எதிர்பார்க்காதீங்க ஆனா…! விசித்திர திருமண அழைப்பிதழ்!!

4 September 2020, 1:39 pm
Viruthunagar Invitation - Updatenews360
Quick Share

விருதுநகர் : நீங்க பஸ் ஓடலனு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லனாலும் சரி பக்கத்து வீட்டுல பைக்கை கடன் வாங்கிட்டு வந்துருங்க என்ற திருமண அழைப்பிதழ் ஒன்ற சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆகாசம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு இரு வீட்டார் சார்பில் நூதன முறையில் பொதுமக்களை கவரும் வண்ணம் அடித்துள்ள திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நீங்க பஸ் ஓடலனு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லனாலும் சரி பக்கத்து வீட்டுல பைக்கை கடன் வாங்கிட்டு வந்துருங்க. சாப்பாடுக்கு நடக்கறது தாவுறது எல்லம் வைக்கனும் ஆசை ஆனால் பிரியாணி மட்டும் தான் என்னால போட முடிஞ்சுது.

எல்லாம் சரி சரக்கு உண்டா?குடி குடியை கெடுக்கும் அதனால் கொஞ்சமா குடுச்சு கோங்க என அந்த திருமண அழைப்பிதழில்அச்சிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பொதுமக்களிடம் பெரும் சிரிப்பலையை உண்டாக்கி உள்ளது. வித்தியாசமான செயல்கள் தற்போது வைரலாகி வருவதால் இருவீட்டார் அச்சிட்ட திருமண அழைப்பிதழ் வலைதளவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0