சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா : கன்னியாகுமரியில் ரங்கோலி கோலம்.!

12 January 2021, 5:49 pm
vivekanthar - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சுவாமி விவேகானந்தர் ஜெயந்திவிழாவினை முன்னிட்டு பெங்களூரை சேர்ந்த ஆசிரியை ஒருவர் ரங்கோலி கோலமிட்டு பார்வையாளர்களை கவர்ந்தார்.

சுவாமி விவேகானந்தரின் 158வது ஜெயந்திவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பெங்களூரை சேர்ந்த ஆசிரியை அர்ச்சனா (32) என்பவர் தனது விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள அரங்கில் வண்ண,வண்ண கோலப்பொடி மூலம் 20 அடி நீளத்தில் காவி உடை அணிந்து, தலைப்பாகை அணிந்த சுவாமி விவேகானந்தரின் உருவத்தை ரங்கோலி கோலமிட்டார்.

அச்சு அசலாக கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல இருக்கும் இந்த ரங்கோலி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இது குறித்து அவரிடம் கேட்ட போது:- பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பெயிண்டிங் மற்றும் ஆர்ட்டிஸ்ட் கலையில் ஆர்வம் கொண்ட நான் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த போது, ரங்கோலி கோலத்தில் பயிற்சி எடுத்ததோடு, துர்கா, ஹனுமன், சிவன், கிருஷ்னன் போன்ற கடவுளின் படங்களை ரங்கோலி கோலமாக வரைந்தேன். சுவாமி விவேகானந்தர் மீது உள்ள பற்றால் அவரது உருவபடத்தை ரங்கோலி கோலமாக வரைந்தேன். என்னுடைய இந்த ஆர்வத்தை எனது கணவர் ஸ்ரீராம் ஊக்குவித்து வருகிறார், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0