‘கல்யாணத்துக்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்குனோம்’: VJ மணிமேகலை வீட்டில் காஸ்ட்லி பைக் திருட்டு..!!

Author: Rajesh
18 April 2022, 10:47 am

சென்னை: பிரபல VJ மணிமேகலைக்கு சொந்தமான பைக் திருடப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.

அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகயாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ள மணிமேகலை சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடும் மணிமேகலை தற்போது தனது வீட்டில் இருந்து விலை உயர்ந்த பைக் ஒன்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில், நண்பரின் வீட்டருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு சம்பவம் தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்களுக்கு சொந்தமான பைக்கை நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தை பார்த்த மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர் என மணிமேகலை தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!