வ.உ.சி பிறந்தநாள் : அரசியல் கட்சியினர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்
5 September 2020, 12:30 pmமதுரை : கப்பலோட்டிய தமிழரும், சுதந்திர போராட்ட தியாகியுமான வ.உ.சிதம்பரனாரின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த அரசியல் கட்சியினரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுதந்திரப் போராட்ட தியாகியும், கப்பல் ஓட்டிய தமிழருமான வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் காலையிலிருந்து தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜு அணிவித்து மரியாதை செலுத்தினார், அவரோடு 40க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உரிய தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் மரியாதை செலுத்தினர்.
மேலும் ஒரே நேரத்தில் அதிமுக பாஜக காங்கிரஸ் திமுக என பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் கூட்டமாக இணைந்து அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மாலை அணிவித்து மரியாதை செய்ததால் நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் நிலவியது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படக்கூடிய இந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக வழக்கத்தைவிட அதிகமான அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
0
0